தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 28, 2020, 2:23 PM IST

ETV Bharat / state

பண்ருட்டியில் ரைஸ் மில் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கடலூர்: பண்ருட்டியில் ரைஸ் மில் அதிபர் வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Income tax raid in rice mill owner house
ரைஸ் மில் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகி சுசிந்தரன். ரைஸ்மில் அதிபரான இவரது வீட்டில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகி சந்திரனின் மகன் முத்துக்குமார், மருமகன் ராம் பிரசாத், அவரது மனைவி ஆகிய மூவரும் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பையில் சாப்ட்வேர் நிறுவனம் மூலம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. மும்பையில் இவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சுகி சந்திரன் மற்றும் முத்துக்குமார் வங்கிக் கணக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதிக அளவில் பணம் பரிமாற்றம் மற்றும் சொத்து வாங்கப்பட்டுள்ளது.

சுகி சந்திரனின் மருமகன் ராம்பிரசாத், சேகர் ரெட்டி நண்பர் என்பதால் தற்போது ரூ.3 ஆயிரம் கோடி எடுத்து வந்து வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சினிமா பாணியில் திருடனை துரத்திப் பிடித்த சென்னை காவலர் - நெட்டிசன்கள் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details