தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஎம் நிறுவனத்திற்குச் சொந்தமான மதுபான ஆலையில் வருமான வரித்துறை சோதனை! - விழுப்புரம் எம்ஜிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான ஆலையில் சோதனை

விழுப்புரம் எம்.ஜி.எம் நிறுவனத்திற்குச் சொந்தமான மதுபான ஆலையில் இன்று (ஜூன் 15) வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

எம்ஜிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான ஆலை
எம்ஜிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான ஆலை

By

Published : Jun 15, 2022, 7:28 PM IST

விழுப்புரம்:வரி ஏய்ப்புப்புகாரின்பேரில் MGM நிறுவனத்திற்குச்சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே வருமான வரித்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் புறவழிச்சாலை அருகே எல்லீஸ் சத்திரம் சாலையில் அமைந்துள்ள மதுபான தொழிற்சாலையில் மதுபானப் பாட்டில்கள் ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து வந்த 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் இன்று (ஜூன் 15) காலை மதுபான ஆலைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

பின்னர், மதுபான உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் கைபேசிகளை வாங்கி, ஊழியர்கள் அனைவரையும் தனி இடத்தில் அமர வைத்து சோதனை மேற்கொண்டனர். இந்த திடீர் சோதனையால் மதுபானம் உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பொய்ப்புகார்?

ABOUT THE AUTHOR

...view details