தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் சுகாதார ஆய்வாளர் - Corona Second way

விழுப்புரம்: நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாகப் பரவி, தற்போது தீவிர ஊரடங்குகள், தடுப்பூசிகள் மூலம் கரோனா இரண்டாவது அலையை தமிழ்நாடு அரசு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் சுகாதார ஆய்வாளர்
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் சுகாதார ஆய்வாளர்

By

Published : Jun 21, 2021, 6:12 PM IST

அந்தவகையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில், கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முதல் 50 நபர்களுக்கு இன்று ரூபாய் 100 பரிசாக முருக்கேரி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details