தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் தடை உத்தரவை மீறிய 3,874 பேர் மீது வழக்கு! - விழுப்புரத்தில் தடை உத்தரவை மீறிய சுமார் 4 ஆயிரம் பேர் மீது வழக்கு

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த மூன்றாயிரத்து 874 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

in vilupuram three thousand cases filed against curfew violators
in vilupuram three thousand cases filed against curfew violators

By

Published : Apr 17, 2020, 10:26 AM IST

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவை மீறியதாக கடந்த மாதம் 25ஆம் தேதி முதல்15ஆம் தேதிவரை மாவட்டத்தில் மொத்தம் மூன்றாயிரத்து 874 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு மூன்றாயிரத்து 958 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து இரண்டாயிரத்து 902 இருசக்கர வாகனங்கள், 59 மூன்றுசக்கர வாகனங்கள், 38 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details