விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு உருது உயர்நிலைப் பள்ளியில் செஞ்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலையோடு இணைந்து கற்றல் - கற்பித்தல் பயிற்சி, முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சி (நிஷ்தா-NISHTHA) நடைபெற்றது.
இதில் செஞ்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் செஞ்சி, மேல்மலையனூர் மற்றும் வல்லம் ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டு கடந்த நான்கு நாட்களாக பயிற்சி பெற்றனர்.