தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் மெடிக்கல் ரெப் கொலை? காவலர்கள் விசாரணை - Gambling Controversy In villupuram

விழுப்புரம்: நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தகராறினால் மெடிக்கல் ரெப் படுகொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

In villupuram Medical Rep Killed in Gambling Controversy? police investigate
In villupuram Medical Rep Killed in Gambling Controversy? police investigate

By

Published : Dec 21, 2020, 10:59 AM IST

மெடிக்கல் ரெப் தனசீலன்

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த தனசீலன் (40) மெடிக்கல் ரெப் (மருத்துவ பிரதிநிதி) ஆக பணிபுரிந்துவருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து சென்றதால் வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார்.

இறந்து கிடந்த தனசீலன்

இந்நிலையில் நேற்று (டிச. 20) மாலை அவருடைய உறவினர் வீட்டில் மின்விளக்கு போடுவதற்காகச் சென்றபோது வீட்டின் அறையில் கழுத்துப்பகுதி, முகம் தலைப் பகுதிகளில், காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து அவர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். பின்னர் சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சூதாட்டத்தில் தகராறு

கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், தனசீலன் அதே ஊரில் அரசுப் பள்ளிக்கு பின்புறம் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம் என்றும், நேற்று அதே கிராமத்தில் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாடியதாகவும் தெரிகிறது.

அப்போது நண்பர்களிடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இந்தப் படுகொலை நடந்திருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மெடிக்கல் ரெப் கொலை

தலைமறைவான நண்பர்

மேலும் அதே ஊரைச் சேர்ந்த அவருடைய நண்பர் அஜித் தலைமறைவாக இருப்பதால், இந்தக் கொலைக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அவரைத் தேடிவருகின்றனர். தொடர்ந்து, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தனசீலனின் நண்பர்கள் ஐந்து பேரிடம் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details