தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் 8 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது! - பான்மசாலா பறிமுதல்

விழுப்புரம்: புதுச்சேரி பகுதிகளில் தடை செய்யப்பட்ட எட்டு லட்சம் மதிப்புள்ள பான்மசாலா பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் 8 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பறிமுதல் :2 பேர் கைது!
விழுப்புரத்தில் 8 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பறிமுதல் :2 பேர் கைது!

By

Published : Jan 12, 2021, 7:36 AM IST

விழுப்புரத்தை அடுத்த அலமேலுபுரத்தில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தனிப்படை காவல்துறை உதவி ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான காவல் துறையினர் அலமேலுபுரம் பகுதிக்குச் சென்று முருகேசன், சந்திரபோஸ் என்பவர்களுக்குச் சொந்தமான குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு சாக்கு மூட்டைகளில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42 ஆயிரம் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பான்மசாலா பொருட்களைக் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில், பெங்களூரு பகுதியிலிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் பான் மசாலாக்களை கொண்டு வந்து விழுப்புரம், புதுச்சேரியில் விற்பனை செய்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரத்தில் 8 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பறிமுதல்

மேலும், பான்மசாலா கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த ஓசூரைச் சேர்ந்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க...தெலங்கானாவில் பள்ளிகளைத் திறக்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details