தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசால் கண்டுகொள்ளப்படாத தடுப்பணை; களத்தில் இறங்கிய பொதுமக்கள் - அரசால் கண்டுகொள்ளப்படாத தடுப்பணை

விழுப்புரம்:  கள்ளக்குறிச்சி அருகே சிதிலமடைந்த நிலையில், பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாத மயூரா ஆற்றின் தடுப்பணையை கிராம மக்கள் ஒண்றிணைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

In the vicinity of Kallakurichi, the villagers worked to reconstruct the Mayura River barrier that had not been tuned for many years.

By

Published : Oct 2, 2019, 10:40 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூரில் உள்ளது மயூரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை. சிதிலமடைந்து பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்படாமல் கிடந்த இந்த தடுப்பணையை இன்று கிராம மக்கள் ஒண்றிணைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தடுப்பணையினை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுசெல்வதன் மூலம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று பயன்பெறும். மேலும், சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

அரசால் கண்டுகொள்ளப்படாத தடுப்பணை; களத்தில் இறங்கிய பொதுமக்கள்

மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை தடுத்து, நீரினை சேமிப்பதன் மூலம் விவசாயிகளும் பயன்பெறுவர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த தடுப்பணையை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் எங்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும், மக்களின் நலன்கருதி மயூரா அணையினை விரிவாக்கம் செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:புதுயேரி நீர்வரத்து அதிகரிப்பு, தடுப்பணையில் ஆனந்த குளியல் போடும் சிறுவர் சிறுமியர்

ABOUT THE AUTHOR

...view details