விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பிரகலதா ராம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் அடிப்படை வசதி பிரச்னைகள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.
மாவட்டத்தில் அதிகளவில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் விழுப்புரம்-திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன்.