இது தொடர்பாக தமிழ்நாட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்., "விழுப்புரம் மாவட்டம் வானூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி மகனுக்கு கனிம வளத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், கல்குவாரி குத்தகை வழங்கியிருக்கிறார்.
'எம்எல்ஏ மகனுக்கு கல்குவாரி குத்தகை; அமைச்சர் பதவிவிலக வேண்டும் - ஸ்டாலின் - விழுப்புரம் மாவட்டம் வானூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி
சென்னை: அதிமுக எம்எல்ஏ மகனுக்கு கல்குவாரி குத்தகை வழங்கிய கனிமவளத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பொது ஊழியர்களின் உறவினர்களுக்கு குத்தகை ஒப்பந்தங்கள் வழங்கப்படக்கூடாது என்ற விதிக்கு முரணாக தம் உறவினர்களுக்கே ஒப்பந்தங்களை வழங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போன்றோரின் முறைகேடுகளை போலவே விதிகள் எதுவுமற்ற காட்சியின் இன்னொரு அத்தியாயம் இது.
அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உரிமம் வழங்கிய துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். லஞ்ச ஊழல் தடுப்புத் துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து சட்டவிதிகளை பின்பற்றி உரிய முறையில் விசாரணை நடத்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.