விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாகக் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஐசிஐசிஐ வங்கி மேலாளருக்கு கரோனா...! - ஐசிஐசிஐ வங்கி மூடல்
விழுப்புரம்: நகரில் இயங்கி வரும் ஐசிஐசிஐ வங்கித் தலைமை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வங்கி உடனடியாக மூடப்பட்டது.
வங்கி மேலாளருக்கு கரோனா
மாவட்டத்தில், இதுவரை 2 ஆயிரத்து 212 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூலை 20) விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இயங்கிவரும் ஐசிஐசிஐ வங்கி தலைமை மேலாளர், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வங்கி உடனடியாக மூடப்பட்டது.