தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

விழுப்புரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

strike

By

Published : Jul 29, 2019, 10:39 PM IST

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் விழுப்புரம் தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்விழுப்புரம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஏ.வி. சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details