விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த நவம்மாள் மருதூர் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (52). இவரது மனைவி மலர் (47). இவர் புதுவையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமனமான நிலையில், இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை மருதூர் குடியிருப்பு பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில், மலர் அரை நிர்வாணமாக உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: "நாற்பதும் நமதே" விழுப்புரம் சென்றடைந்த இருசக்கர வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு!
அப்போது அவர் அணிந்திருந்த தாலிக் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாயும் பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் இருந்து ஊர் பக்கமாக ஓடி மலரின் வீட்டிற்கு முன்பு வந்து நின்றது.
இதனைத் தொடர்ந்து மலரின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக உண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது கணவர் பாண்டியன், அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்தனர்.
மேலும், பாண்டியன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தது அவர் மீதான சந்தேகம் உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் பாண்டியன் தேடப்பட்டு வந்த நிலையில், அவரை தற்போது கண்டமங்கலம் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கரும்பு தோட்டத்திக்குள் பெண் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கவுந்தபாடி அருகே 4 ஆண்டுகளாக ஆடு, கோழிகளை திருடி வந்த நபர்களுக்கு தர்ம அடி!