விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரம் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஆகஸ்ட் 31)காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கர்நாடகப்பகுதியில் இருந்து பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரம் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் உள்ள எல்லீஸ்சத்திரம் தடுப்பணை அருகில் உள்ள வலது புற கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் விழுப்புரம் ஏனாதிமங்கலம் பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பின், அந்தப் பகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார்.
அதனைத்தடுக்கும் வகையில் உடனடியாக கருங்கற்களைக்கொண்டு தடுப்பு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.