விழுப்புரம் மாவட்டம் வண்டிமேட்டை சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான முந்திரி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம் மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.