விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் திருநங்கைகள் சிறப்பு விழா உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாகும். அந்த வரிசையில் கூவாகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘மிஸ் திருநங்கை’ போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டிக்காக விழுப்புரம் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து வந்த திருநங்கைகள் தங்கியுள்ளனர். இதில் சில திருநங்கைகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள உணவகத்திற்கு நேற்று உணவு அருந்தச் சென்றுள்ளனர்.