விழுப்புரம்:தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் உடன் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் ம. சிங்காரவேலர் உருவச்சிலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் ஜானகிபுரம் பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் நான், தமிழ் மக்களோடு தமிழில் பேச இயலவில்லை என்பதை எண்ணி வருந்துகிறேன். தமிழ்நாட்டின் மொழி பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை நாடு முழுவதும் மக்கள் போற்றுகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட பாஜக மையக்குழு கூட்டம் ஏழு ஆண்டுகளுக்குள்ளாக தேசத்தில் ஒருவருக்குக்கூட வீடு இல்லாத நிலையிருக்காது. 13 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு காங்கிரஸ் ஆட்சியில் தர இயலவில்லை. பாஜக ஆட்சி அதனை செய்திருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்குள்ளாக அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி என்பது மக்களுக்கான மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கும் கூட்டணி ஆகும். எம்ஜிஆர் வளர்த்தெடுத்த அதிமுக இயக்கத்தோடு, பாஜக கூட்டணி வைத்துள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது குடும்ப அரசியலை நம்பி உள்ள கூட்டணி” என்று கூறினார்.