தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு நேரத்தில் கூழ் ஊற்ற அனுமதி கேட்ட இந்து முன்னணி! - hindu munnani asking permission to kovil function

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுக்குள்பட்ட அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

hindu
hindu

By

Published : Apr 22, 2020, 3:11 PM IST

ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் கோயில்களில் கூழ் ஊற்ற அனுமதி கேட்டு வட்டாட்சியரிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுக்குள்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் சித்திரை மாதத்தில் கூழ், கஞ்சி வார்ப்பது இந்து மக்களிடையே வழக்கம்.

ஆனால், இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் கூழ், கஞ்சி வார்க்கும் திருவிழா நடத்துவதில் சிக்கல் உள்ளது. மேலும், பொருளாதாரம் பொதுமக்களிடம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கூழ் ஊற்ற அனுமதி கேட்ட இந்து முன்னணியினர்

எனவே, திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுக்குள்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் கூழ், கஞ்சி வார்ப்பதற்குத் தேவையான அனைத்து பொருள்களையும் (அரிசி, கேழ்வரகு, கம்பு) அரசே இலவசமாக வழங்க வேண்டும். மேலும் விழாவினை தனிநபர் இடைவெளிவிட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கி, பாதுகாப்பு வழங்கிட வேண்டும்" எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு!

ABOUT THE AUTHOR

...view details