தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புராதன சின்னங்களை சிதைத்தால் கடும் நடவடிக்கை பாயும்! - ancient symbols are destroyed

விழுப்புரம்: செஞ்சி சுற்றுவட்டாரத்தில் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை எச்சரித்துள்ளார்.

புராதன சின்னங்களுக்கு சிதைத்தல் கடும் நடவடிக்கை பாயும்!
புராதன சின்னங்களுக்கு சிதைத்தல் கடும் நடவடிக்கை பாயும்!

By

Published : Aug 18, 2020, 11:52 AM IST

விழுப்புரம் மாவட்டம் நெகனூர்பட்டி பகுதியில் உள்ள நெகனூர்பட்டி சமணப் பண்பாட்டுத் தலம், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகளும், வண்ணத்தால் வரையப்பட்ட ஓவியங்களும், சமண சமய குறிப்புகளுள்ள எழுத்துருகளையும் கொண்ட புராதன சின்னமாக விளங்குகிறது. இதன் அருகிலுள்ள முருகன் கோயில் பொது மக்களின் வழிபாட்டுத் தலமாக உள்ளது.

மேலும், செஞ்சி வட்டத்தில் உள்ள தொண்டூர் மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும், சமண சிற்ப படுகைகளும் அமைந்துள்ளன. இந்த இரண்டு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


எனவே, இந்த புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளிலும், அவற்றின் அருகாமையில் உள்ள பகுதிகளிலும் யாரேனும் சட்டத்துக்கு புறம்பாக பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதோ, கல் உடைப்பதோ அனுமதிக்க இயலாது. இந்த அறிவிப்பையும் மீறி செயல்படும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:'இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.15இல் வெளியீடு'

ABOUT THE AUTHOR

...view details