தமிழ்நாடு

tamil nadu

தடுப்பூசிப்போடும் பணி குறித்த முக்கிய தகவல்கள் என்னென்ன... பகிர்ந்துகொள்ளும் சுகாதாரத்துறைச் செயலாளர்!

By

Published : Jan 15, 2021, 9:12 AM IST

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் மருத்துவமனை கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசிப் போடும் பணி தொடங்குகிறது எனத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர்
சுகாதாரத்துறை செயலாளர்

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசிப் போடும் பணி (நாளை) 16ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசிப் பணி நடைபெறுவதையொட்டி நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போடும் இடங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாளை(ஜனவரி 16) முதல் தமிழ்நாட்டில் தடுப்பூசிப் போடும் பணி நடைபெற உள்ளது. முதற்கட்டமாக பதிவு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே தடுப்பூசி பணி நடைபெற உள்ளது.

தடுப்பூசி போடும் இடங்களில் உள்ளே நுழைவதற்கு ஒரு வழியும் தடுப்பூசி போட்ட பிறகு மாற்று வழியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, ராதாபுரம், சிறுவந்தாடு வட்டார அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசிப் போடும் பணி நடைபெற உள்ளது.

தடுப்பூசிகள் அனைத்தும் சிறப்பு வாகனத்தில் குளிரூட்டப்பட்ட நிலையிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று இறங்கு முகத்திலிருந்தாலும் நாம் அதைத் தொடர்ந்து கண்காணித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் வருகிறோம்.

தமிழ்நாட்டில் 166 இடங்களில் தடுப்பூசிப்போடும் பணி நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 3 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிப் பணிக்கான வழிகாட்டுதல் வீடியோ கான்பெரன்ஸிங் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை(ஜனவரி 16) தேசிய அளவில் தடுப்பூசிப் போடும் பணி தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டில் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். அதன் பிறகு நிர்ணயிக்கப்பட்டுள்ள மையங்களில் தடுப்பூசிப் பணி நடைபெற உள்ளது" என்றார்.

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முக கனி, துணை இயக்குநர் செந்தில்குமார், மருத்துவ துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ. சாந்தி, மருத்துவத் துறைப் பேராசிரியர்கள் ஆகியோர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details