கரோனா தடுப்புப்பணிகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று (டிச.17) விழுப்புரத்தில் அமைந்துள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய், சேய் நலப்பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளின் தரம் குறித்து உறுதிப்படுத்தினார்.
மேலும் மருத்துவமனை வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நோய்த்தடுப்பு தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது வரை நோய்த்தடுப்பு சிகிச்சை முறை, நோய்த்தொற்று சதவீதம், நோயாளிகளின் தேர்ச்சி சதவீதம் மற்றும் இறப்பு சதவீதம் உள்ளிட்ட ஆய்வறிக்கைகளைக் கேட்டறிந்தார்.
விழுப்புரத்தில் கரோனா தடுப்புப் பணி மேற்கொண்ட சுகாதாரத்துறைச் செயலாளர்! - Corona prevention work
விழுப்புரத்தில் அமைந்துள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு பணியில் சுகாதாரத்துறை செயலாளர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவி தேவி உள்ளிட்ட மாவட்ட சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தலைமை செயலகத்தில் கரோனா தடுப்பு பணி தீவிரம்!