விழுப்புரம்:கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் சேவியர். இவர் சமீபகாலமாக நடைபெற்று வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல் போக்கு குறித்து கவலை தெரிவித்து வருகிறார்.
அவற்றை சரிசெய்யும் விதமாக , மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் அக்கறை எடுத்து வருகிறார். மேலும் மாணவர்கள் கையில் கட்டியிருந்த சாதிய அடையாளங்களை அகற்றியும், நன்னடத்தை குறித்து அறிவுரைகளை வழங்கியும் வருகிறார்.