மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
வேளாண் திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம்! - தமிழக வாழ்வுரிமைக் கட்சி
விழுப்புரம்: வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விழுப்புரத்தில் இன்று (அக்டோபர் 24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் எம்.ஆர்.குமரன் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கானோர் வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் ஏர் கலப்பையில் தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்தினர்.