விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, பருவ மழையினால் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.16 லட்சத்துக்கான காசோலை வழங்கும் விழா இன்று (ஆகஸ்ட 1) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலையை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் நிவாரண நிதியாக 10 மாற்றுத் திறனாளிகளுக்கு, 15 வகையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கியத் தொகுப்பையும் அமைச்சர் வழங்கினார்.