தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களின் மனநிலைக்கு மதிப்பளிக்க வேண்டும்- பொன்முடி - திருக்கோவிலூர் கடையடைப்பு செய்திகள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலூர் இணைந்து இருக்க வேண்டும் என கூறி திருக்கோவிலூர் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்தினர்.

பொன்முடி

By

Published : Sep 28, 2019, 4:22 PM IST

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே எந்தெந்த பகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணையும் என்பன போன்ற பல தகவல்கள் வெளியாவதால் இன்றுவரை பொதுமக்கள் குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருக்கோவிலூரை விழுப்புரம் மாவட்டத்துடனேயே இணைத்து வைக்க வேண்டும் என கூறி இன்று திருக்கோவிலூரில், அரகண்டநல்லூர், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. வியாபாரிகள் மட்டும் அல்லாமல் ஆட்டோ, நான்கு சக்கர ஓட்டுநர்களும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "மாவட்டம் பிரிப்பதை தாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மாவட்டம் பிரிக்கும்போது பொதுமக்களின் மனநிலையை கருத்தில்கொண்டு அதற்கேற்றவாறு பிரிக்க வேண்டும் என அப்போதே கூறினோம். மாவட்டத்தை முறையாக பிரிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், பரவி வரும் வதந்திகளால் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால்தான் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. எனவே ஆட்சியில் இருப்பவர்கள் , அரசு அலுவலர்கள் அந்த பகுதி மக்களை அழைத்து, அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு மாவட்டப் பகுதிகளை பிரிக்க வேண்டும்" என்றார்.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு

இதேபோல் கடந்த வாரம் திருவெண்ணெய் நல்லூரிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பார்க்கவும் : கள்ளக்குறிச்சியுடன் இணைய மறுப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details