தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூங்கிக் கொண்டிருந்த அரசு ஓட்டுநரை கட்டையால் அடித்து நகை திருட்டு - gvt driver

விழுப்புரம்: சின்ன சேலம் அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநரை 3 பேர் கொண்டு கும்பல், கட்டையால் அடித்துவிட்டு அவரது மனைவியின் தாலியைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

driver

By

Published : Jun 4, 2019, 9:11 AM IST

சின்ன சேலம் அருகே ஈசாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு அன்பரசன் தன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வீட்டுக்குள் புகுந்த அடையாள தெரியாத மூன்று கொள்ளையர்கள் அவரை கட்டையால் தாக்கியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அரசு பேருந்து ஓட்டுநர்

மேலும், உறங்கிக்கொண்டிருந்த அன்பரசனின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த இருந்த தாலி சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அந்த கும்பல் தப்பிச்சென்றது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அன்பரசன் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details