தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி - villupuram

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல்
அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல்

By

Published : Sep 14, 2022, 11:53 AM IST

விழுப்புரம்: மரக்காணம் அருகே கூனிமேடு கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்து பேரில் சென்னையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ரவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சென்னை, வெஸ்ட் ஜாபர்கான் பேட்டை சபாபதி மனோகர், ராஜீவ் காந்தி ஆகிய 3 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து மரக்காணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு - சிசிடிவி உதவியுடன் போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details