விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அவர்களை குரங்குகளை ஏவி கடிக்க வைத்துள்ளனர். இவை அனைத்தையும் கடந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுவதை பார்க்கும் போது, அங்கு பெரும் குற்றங்கள் நடந்திருக்கக் கூடும்.