தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஞ்சி ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செஞ்சி ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

செஞ்சி ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
செஞ்சி ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

By

Published : Oct 21, 2022, 1:27 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தை களைகட்டியது. தர்மபுரி, வேலூர், ஆம்பூர், புதுச்சேரி, பெங்களுரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை வாங்கியும், விற்றும் சென்றனர். இதில் செம்மறி ஆடுகள் ரூ.3000 முதல் ரூ.4000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ.7000 முதல் ரூ.9000 வரை விற்கப்பட்டன.

நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். உடனுக்குடன் ஆடுகள் விற்பனையானதால் கிராமப்புற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:புஞ்சைபுளியம்பட்டி மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கும் மேல் கால்நடை விற்பனை

ABOUT THE AUTHOR

...view details