தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவில் முதல் முறை: பெண்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தொடங்கப்பட்டுள்ள ஆடு வங்கி! - Women empowerment program in Villupuram

விழுப்புரம்: பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் குறிக்கோளாடு விழுப்புரத்தில் ஆடு வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆடு வங்கி
ஆடு வங்கி

By

Published : Oct 31, 2020, 5:53 PM IST

Updated : Oct 31, 2020, 5:58 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலூகாவுக்கு உட்பட்டது காந்தலவாடி கிராமம். இந்தியாவிலேயே முதல் முறையாக இங்கு மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் ஆடு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆடு வங்கியின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவசமாக இரண்டு ஆடுகள் வழங்கப்படுகின்றன. சில காலம் கழித்து, இனப்பெருக்கம் அடைந்த ஆடுகளை இந்த ஆடு வங்கியின் நிர்வாகிகளே உரிய விலைக்குப் பெற்றுக் கொள்கின்றனர். இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் ஆடு விற்பனை செய்பவரும், வாங்குபவரும் நேரடியாக லாபம் அடைகின்றனர்.

இது குறித்து அக்ரோ டெக் நிறுவனத்தின் இயக்குநர் சீதா கூறுகையில், "மத்திய-மாநில அரசுகள் மகளிர் வளர்ச்சிக்காக பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்றுதான் அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்.

வாழ்வாதாரத்தில் பின்தங்கிய பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக இரண்டு ஆடுகளை வழங்கிவருகிறோம். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆடுகள் இனப்பெருக்கம் அடைந்ததும், அதனை நாங்களே நியாயமான விலைக்கு வாங்கி கொள்கிறோம். இதன்மூலம் இடைத்தரகருக்கு வேலை இல்லாமல் போகிறது" என்றார்.

கிராமப்புறங்களில் படிக்காத, வேலை வாய்ப்பற்ற, ஏழை - எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆடு வங்கி மூலம், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பயனடைந்துவருகின்றனர்.

இது குறித்து வசந்தி என்பவர் கூறுகையில், "நான் கடந்தாண்டு அக்ரோ டெக் நிறுவனத்திலிருந்து இரண்டு ஆடுகளைப் பெற்றேன். அவை தற்போது இனப்பெருக்கம் அடைந்து 10 ஆடுகளாக உள்ளது.

ஆடுகளை விற்க சந்தைக்கு சென்றபோது, அங்குள்ள இடைத்தரகர்கள் குறைவான விலைக்கே எனது ஆடுகளை கேட்டனர். ஆனால், இங்கு ஆடு வங்கியில் என்னால் நியமான விலைக்கு ஆடுகளை விற்பனை செய்ய முடிந்தது. இதனால் எனக்கு கூடுதல் லாபம் கிடைத்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தோட்டக்கலைத் துறையின் உதவியால் வெங்காய விளைச்சலில் நல்ல லாபம் ஈட்டும் தம்பதி

Last Updated : Oct 31, 2020, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details