தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2020, 1:50 PM IST

ETV Bharat / state

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்- தற்கொலைக்கு முயன்ற மாணவி!

விழுப்புரம்: செஞ்சியில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட்
நீட்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் ரம்யா தேவி (19). இவர் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் (செப்.13) நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வு எழுதினார்.

இதற்கான முடிவுகள் நேற்று (அக்.16) வெளியான நிலையில், இதில் ரம்யா தேவி 205 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி இன்று (அக்.17) காலை வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருவது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:சக்கர நாற்காலியில் வந்த முதியவர் - உடனடி தீர்வு கண்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details