விழுப்புரம்: செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் உதவிஅலுவலர் மெஹருன்னிஷா திமுக வேட்பாளர் கேஸ் மஸ்தானுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக முன்னதாகவே பாமக வேட்பாளர் ராஜேந்திரன் மாவட்டத் தேர்தல் அலுவலரைச் சந்தித்துப் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பாமக வேட்பாளர் அவருடைய ஆதரவாளர்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.