வைகுண்டவாச பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழுப்புரம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (ஜனவரி 2) அதிகாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன்படி வண்டிமேடு அருகே உள்ள ஸ்ரீகனகவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைகுண்டவாசல் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. தினமும் காலை 7 மணிக்கு திருமஞ்சனமும் காலை 11 மணிக்கு சுவாமி புறப்பாடு மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப தரிசனம் முடிந்து நித்ய பூஜை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு சொரச்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்டவாசல் பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பத்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். அதிகாலை முதல் 3 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாளை ஜனவரி 3 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ரூ.6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம்