இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக வழங்கப்படும், பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கான இலவச பேருந்து பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2020-2021ஆம் நிதியாண்டுக்கு இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், விழுப்புரம் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.