தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு - நாளை ஒத்திவைப்பு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தெளிவான வழக்கு நகல்களை வழங்க வேண்டும் என டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு (நவ.02) ஒத்திவைக்கப்பட்டது.

By

Published : Nov 1, 2021, 11:04 PM IST

Updated : Nov 2, 2021, 7:05 AM IST

நீதிபதி கோபிநாதன் அறிவிப்பு
நீதிபதி கோபிநாதன் அறிவிப்பு

விழுப்புரம்:கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் பாதுகாப்புக்குச் சென்ற இடத்தில் பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, முன்னாள் டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இந்நிலையில் இன்று (நவ.01) முன்னாள் டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அப்போது, டிஜிபி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வழக்கு நகல்கள் தெளிவாக இல்லை என்றும், தெளிவான வழக்கு நகல்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து தெளிவான நகல்கள் வழங்க நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். தொடர்ந்து, வழக்கு விசாரணையைை நாளை (நவ.02) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை

Last Updated : Nov 2, 2021, 7:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details