தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவுக் கடன் சங்க பணத்தில் கையாடல்; 4 பேர் கைது - பணம் கையாடல்

விழுப்புரம்: மரக்காணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க பணத்தில் கையாடல் செய்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

FOUR ARRESTED OF MISHANDLING COOPERATIVE CREDIT

By

Published : Jun 19, 2019, 10:05 AM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கந்தாடு கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டுவருகிறது. இச்சங்கத்தின் கட்டுப்பாட்டில் ஆறு நியாய விலைக் கடைகள் உள்ளது. இந்தக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைத் தொகையை விற்பனையாளர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து திண்டிவனம் சரக கூட்டுறவு துணை பதிவாளர் பால்ராஜ், கந்தாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் தணிக்கையை மேற்கொண்டார். அப்போது 21 லட்சத்து 64 ஆயிரத்து 801 ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறைக்கு பால்ராஜ் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து விற்பனையாளர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், முத்துக்குமார், ராஜா ஆகிய நான்கு பேரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரைத் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details