விழுப்புரம்: கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிறப்பு டிஜிபிக்கு உதவியதாக கூறப்படும் செங்கல்பட்டு எஸ்பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை - நீதிமன்றம் எச்சரிக்கை
11:41 October 29
பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 1 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (அக்.29) வழக்கு விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி மட்டும் ஆஜராகியிருந்தார்.
முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 317இன்படி மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுவை நீதிபதி கோபிநாதன் தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை நவம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி கோபிநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - துரைமுருகன்