விழுப்புரம்:திமுக அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், மதுரை உயர் நீதிமன்றத்தில் போதுமான தகவல்களை வழங்காததாலும் தான் 10.5% இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பு இப்படி அமைந்துள்ளது என விழுப்புரத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏன் மூத்த வழக்கறிஞரை களமிறக்கவில்லை..?:இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் 10.5 % இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அம்பாசங்கர் அறிக்கையை ஏன் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவில்லை..?. அம்பா சங்கர் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மற்ற வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்களை களமிறக்கி வாதாடும் தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் ஏன் அப்படி நடந்துகொள்ளவில்லை..?