விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் சோதனைச்சாவடியில் முதல் நிலை காவலர் அழகுவேல் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே மதுபாட்டில் கடத்தல்; குற்றவாளிகள் தப்பி ஓட்டம் - விழுப்புரம்
விழுப்புரம்: கோட்டகுப்பம் அருகே புதுச்சேரியிலிருந்து இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Foreign liquor bottle trafficking
அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டத்துக்கு புறம்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்நிய மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில், மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.