தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுக்க விக்கிரவாண்டியில் தீவிர வாகன சோதனை - தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுக்க விக்கிரவாண்டியில் தீவிர வாகன சோதனை

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

flying squad

By

Published : Sep 26, 2019, 5:27 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த 21ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

மேலும் வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 39 பறக்கும்படை, 39 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அலுவலர்கள்

இந்நிலையில் (பறக்கும் படை குழு 2) பறக்கும் படை அலுவலர் அறவாழி தலைமையிலான அலுவலர்கள் இன்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, கும்பகோணம், திருச்சி என இரண்டு மார்க்கங்களில் செல்லும் வாகனங்களிலும் சோதனை செய்யப்பட்டது. மேலும் வாகன ஓட்டுனர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details