விழுப்புரம் ரயில் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான பஞ்சு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், பற்றி எரிந்த தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு உள்ளிட்ட இதர பொருள்கள் எரிந்து நாசமாகின.