விழுப்புரம்:வளவனூரில் இந்தியன் மெட் மார்ட் இயங்கி வருகிறது. கலியமூர்த்தி என்பவர் இதன் உரிமையாளர் ஆவார். பெட் மார்ட் நிறுவனத்திற்கான ஷோபா, மெத்தை, தலையனை செய்வதற்காக பஞ்சு மூலப்பொருட்கள் அடங்கிய குடோன் அருகே உள்ள சகாதேவன் பேட்டை கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் கலியமூர்த்தி தன்னுடைய குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்ற நிலையில், நேற்று மாலை ஆறரை மணி அளவில் இவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தன. தீ விபத்து குறித்து விரைந்து வந்த வளவனூர் போலீசார் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.