விழுப்புரம்:2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பரப்புரையின்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தனக்கு, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் காவல் கண்காணிப்பாளர் முன்னதாக புகாரளித்தார்.
அதனடிப்படையில், முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜூலை 29ஆம் தேதி தாக்கல்செய்தனர்.
இந்த நிலையில், புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபியாக இருந்தவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. வழக்கு விசாரணை தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெற்றுவருகிறது.