விழுப்புரம்:பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், பெண் எஸ்பி பாலியல் தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று (டிசம்பர் 10) பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியின் கணவர் நேரில் சாட்சியமளித்தார். அதனைத் தொடர்ந்து அப்போதைய பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.