விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புக்குச் சென்ற பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி (Special DGP) மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 5 மாதங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (பிப்.9) விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்கு விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர். குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி ஆஜராகவில்லை.
இதையும் படிங்க:முடிதிருத்தும் நிலையங்களிலும் சாதியப் பாகுபாடா? இது மிகப்பெரிய பிரச்னை - நீதிபதிகள் வேதனை