விழுப்புரம்:கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சரின் பாதுகாப்புப்பணியில் இருந்த பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ஒருவர் மீதும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விசாரணை
இந்நிலையில், இன்று (நவ.11) நடைபெற்ற விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., கண்ணன் எஸ்.பி., ஆகியோர் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
மேலும், சாட்சியங்கள் அளிப்பதற்காக புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அலுவலரும் ஆஜராகியுள்ளார். தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி