விழுப்புரம்: தமிழ்நாடு காவல் துறை சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் காவல் கண்காணிப்பாளர், ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவிய செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று (செப்.29) நடைபெற்ற விசாரணையின்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்," இந்த வழக்கு விசாரணையை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை" என்று வாதாடினார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முகாந்திரம் இருக்கிறது என்று கூறி அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறக்கூடாது. ஆந்திரம் உள்ளிட்ட வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யக்கோரி, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்றமும் விழுப்புரம் நீதிமன்றத்தில் தான் இந்த வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண் எஸ்பி பாலியல் வழக்கு: ஆஜராகாத முன்னாள் சிறப்பு டிஜிபி