விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அடுத்த செஞ்சி தாலுக்கா நாகந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (42). விவசாயியான இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விவசாய பணிக்காக நாகந்தூரில் டீக்கடை நடத்தி வரும் ராஜசேகரின் (42) மூலமாக, திண்டிவனம் இடையன்குளம் பகுதியை சேர்ந்த சம்பத்திடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்திட்டு ரூ.25 ஆயிரம் கடன் பெற்றார்.
இந்தத் தொகையை வட்டியுடன் சேர்த்து 50 ரூபாய் ஆயிரம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் பத்திரத்தில் 2 லட்சம் ரூபாய் என எழுதி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, சொத்துக்களை ஜப்தி செய்து விடுவேன் என அய்யப்பனிடம், ராஜசேகர், சம்பத் இருவரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அய்யப்பன் கடந்த 20ஆம் தேதி தனது வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வெளியில் வந்து வாந்தி எடுத்தார்.