விழுப்புரம் மாவட்டம் அண்ணமங்கலம் அடுத்துள்ளது, கலிங்கமலை. இந்தப் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயி மணி (55) என்பவருக்குச் சொந்தமான 50 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு மொத்தமே 60 சென்ட் நிலம் மட்டுமே இருந்துள்ளது. அதிலும் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால், அவர் விவசாயம் செய்ய முடியாமல் கூலி வேலைக்குச் சென்று வந்தார்.
சாவுக்குக் காரணமான மின் கோபுரம்
இந்நிலையில் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட மணி, தனியார் ஒப்பந்ததாரரிடம் பலமுறை முறையிட்டும் இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் காணப்பட்ட மணி, அவரது நிலத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரத்தில் ஏறி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.