விழுப்புரம் மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலன் பெறவேண்டியும், அவர் அரசியலுக்கு வர வேண்டியும், ரஜினி இப்ராஹிம் என்பவரின் வழிகாட்டுதலின் படி, அரகண்டநல்லூரில் உள்ள அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் இருந்து முகையூர் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 15 பேர் இன்று காலை (ஜன.9) பாதயாத்திரையாக, 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயிலம் முருகன் கோயிலுக்கு புறப்பட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி ரசிகர்கள் பாத யாத்திரை! - Actor Rajinikanth
விழுப்புரம்: நடிகர் ரஜினிகாந்த் உடல் நலன் பெற வேண்டியும், அரசியலுக்கு வர வேண்டியும் ரஜினி ரசிகர்கள் மயிலம் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர்.
![நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி ரசிகர்கள் பாத யாத்திரை! நடிகர் ரஜினி பூரண நலம் பெற வேண்டி ரசிகர்கள் பாத யாத்திரை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10175735-thumbnail-3x2-vpm.jpg)
நடிகர் ரஜினி பூரண நலம் பெற வேண்டி ரசிகர்கள் பாத யாத்திரை
ரஜினி நலம் பெற வேண்டி பாத யாத்திரை சென்ற ரசிகர்கள்
இந்தப் பாதயாத்திரையை முடித்துவிட்டு அங்கேயே அனைவரும் மொட்டை அடித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ரஜினி உடல் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபாடு!
Last Updated : Jan 9, 2021, 1:29 PM IST